விக்டோரியாவில் 2020 மற்றும் 2021 –க்கான பொது விடுமுறைகளின் பட்டியல்

விடுமுறை20202021
புத்தாண்டுத் தினம் புதன், 1 ஜனவரி வெள்ளி, 1 ஜனவரி
ஆஸ்திரேலியா தினம் திங்கள், 27 ஜனவரி
(26 ஜனவரி ஞாயிறு என்பதால்,
திங்கள் அன்று தான் பொது விடுமுறை)
செவ்வாய், 26 ஜனவரி
தொழிலாளர் தினம் திங்கள், 9 மார்ச் திங்கள், 8 மார்ச்
புனித வெள்ளிக்கிழமை*வெள்ளி, 10 ஏப்ரல் வெள்ளி, 2 ஏப்ரல்
ஈஸ்டர் ஞாயிறுக்கு முன் சனிக்கிழமைசனி, 11 ஏப்ரல் சனி, 3 ஏப்ரல்
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை ஞாயிறு, 12 ஏப்ரல் ஞாயிறு, 4 ஏப்ரல்
ஈஸ்டர் திங்கட்கிழமைதிங்கள், 13 ஏப்ரல் திங்கள், 5 ஏப்ரல்
அன்சாக் நாள்*

சனி, 25 ஏப்ரல்¹

ஞாயிறு, 25 ஏப்ரல்¹
ராணியின் பிறந்தநாள்திங்கள், 8 ஜூன் திங்கள், 14 ஜூன்
ஆஸ்திரேலிய கால்பந்து லீக் (AFL)
மாபெரும் இறுதிப் போட்டிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை
வெள்ளி 23 அக்டோபர் AFL கால அட்டவணைக்கு உட்பட்டது†
மெல்போர்ன் கோப்பை நாள்செவ்வாய், 3 நவம்பர் செவ்வாய், 2 நவம்பர்
கிறிஸ்துமஸ் நாள்*வெள்ளி, 25 டிசம்பர் சனி, 25 டிசம்பர்
கிறிஸ்மஸ் மறுநாள்சனி, 26 டிசம்பர்
திங்கள், 28 டிசம்பர்²
ஞாயிறு, 26 டிசம்பர்
திங்கள், 27 டிசம்பர்²

¹ அன்சாக் தினம் (Anzac Day) நிகழும் நாளில் கொண்டாடப்படுகிறது. Anzac தினம்  வார இறுதியில் வரும் போது மாற்றீடாக எந்தப் பொது விடுமுறை தினமும் இல்லை.

² வார இறுதியில் பாக்ஸிங் டே (Boxing Day) வருவதால், இது ஒரு கூடுதல் பொது விடுமுறை தினமாகும்

† AFL கிராண்டு ஃபைனல் பொது விடுமுறை தினத்திற்கு முன்னர் உள்ள வெள்ளிக்கிழமையானது, வழக்கமாக செப்டம்பர் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்த இணையத்தளம், 2021 AFL கால அட்டவணை வெளியிடப்பட்டதும், சரியான தேதியுடன் புதுப்பிக்கப்படும்.

குறிப்பு: எல்லா பொது விடுமுறை தினங்களும், வெளியிடப்படும் நேரத்தில் துல்லியமானவை, ஆனால் அவை மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்கலாம்.

மெட்ரோ-அல்லாத மன்றத்தால் மாற்று உள்ளூர் விடுமுறை தினம் ஏற்பாடு செய்யப்படாவிடில், மெல்பர்ன் கப் தினம் (Melbourne Cup Day) விக்டோரியா முழுவதும் விடுமுறை தினமாகும்.

* கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட வணிக நாட்கள்

ஒவ்வொரு ஆண்டும் கட்டுப்படுத்தப்பட்ட இரண்டரை வணிக நாட்கள் உள்ளன என்று விக்டோரியன் சட்டம் குறிப்பிடுகிறது:

 • புனித வெள்ளிக்கிழமை
 • கிறிஸ்துமஸ் நாள்
 • அன்சாக் நாள் அன்று மு.ப 12.01 மணிக்கும் பி.ப 1 மணிக்கும் இடையில்

இந்தக் குறிப்பிட்ட நாட்களில், விதிவிலக்கு அளிக்கப்பட்ட கடைகள் மட்டுமே திறக்க அனுமதி கொடுக்கப்படுகிறது

விதிவிலக்கு அளிக்கப்பட்ட கடைகள் என்றால் என்ன?

விதிவிலக்கு அளிக்கப்பட்ட கடைகள் என்பது பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவை

 • கட்டுப்படுத்தப்பட்ட ஒரு வர்த்தக நாளில் எந்த நேரத்திலும் கடையில் 20 அல்லது அதற்குக் குறைவான நபர்கள் பணி புரிய வேண்டும்; மற்றும்
 • கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நாளிற்கு ஏழு நாட்கள் முன் எந்த நேரத்திலும் வணிகமும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் பணிக்கு அமர்த்தும் நபர்களின் எண்ணிக்கை 100 க்கும் மேற்படாமலிருக்க வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நாட்களுக்கு விதிவிலக்கு

ஏதேனும் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நாட்களில் இருந்து குறிப்பிட்ட வகையான தொழில்கள் விலக்களிக்கப்பட்டுள்ளன. அவை ஆண்டு முழுவதும் தாங்கள் விரும்பும் நேரத்தில் இயங்கலாம். விலக்களிக்கப்பட்டுள்ள வர்த்தகத்தின் வகைகள்:

 • மருந்துக்கடைகள்
 • பெட்ரோல் கடைகள்
 • உணவகங்கள்
 • சிறு உணவகங்கள்
 • எடுப்புச்சாப்பாடு மையங்கள்
 • சேவை வழங்குநர்கள்
 • வாடகை மையங்கள்(காணொளி கடைகள் உட்பட)

கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நாட்களில் நள்ளிரவு வர்த்தகம் மற்றும் மதுபான விற்பனை

உணவகங்கள், கேஃபேகள், பார்கள், கிளப்கள் மற்றும் புட்டிக் கடைகள் போன்ற வர்த்தகங்கள், கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நாட்களின் போது மதுபானம் வழங்குவது தொடர்பான கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து Victorian Commission for Gambling and Liquor Regulation(சூதாட்டம் மற்றும் மதுபான ஒழுங்குமுறைக்கான விக்டோரியன் ஆணையம்) -ஐ சரிபாருங்கள்.

ANZAC தினத்திற்கான கூடுதல் கட்டுப்பாடுகள்

மேலே உள்ள விதிமுறைகளுக்கும் கூடுதலாக, ANZAC தினத்தன்று (25 ஏப்ரல்) பின்வரும் வகையான வணிகங்கள் ANZAC நாளன்று பிற்பகல் 1:00 மணிக்கு முன்னர் செயல்படக்கூடாது:

 • திரையரங்கம் (உள்ளரங்கு அல்லது வெளியரங்கு என எதுவாக இருந்தாலும்)
 • பிற பொழுதுபோக்குகள், பின்வருவன உள்பட, ஆனால் இவை மட்டுமே வரம்பல்ல: நேரலை நடன அல்லது இசை நிகழ்ச்சி, இசைக் கச்சேரி அல்லது நாடகம்
 • நிலச்சொத்து ஏலங்கள்.

ANZAC தினத்தன்று தொழிற்சாலைகளும் கிடங்குகளும்

தொழிற்சாலைகள் அல்லது கிடங்குகள் போன்ற வணிகங்கள், அல்லது ஏதேனும் தயாரிப்புச் செயல்முறையை மேற்கொண்டிருக்கின்ற ஏதேனும் வளாகத்திற்காக, ANZAC தினச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் விதிமுறைக்கு இணங்க இந்த வணிகங்கள் ANZAC தினம் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

ANZAC தினத்தன்று திறத்தல் மற்றும் இயங்குதல் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, தயவுசெய்து ANZAC Day Act (ANZAC தினச் சட்டம்) -ஐப்படிக்கவும்.

உங்கள் நாள்காட்டியின் பயன்படுத்துவதற்கு, விக்டோரியன் ப ப்ளிக் ஹாலிடேஸ் டேட்ஸ் (iCAL) (விக்டோரியன் பொது விடுமுறை தினங்களின் தேதி) -ஐ பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.