Skip to main content

தொழில் மீள்துவக்கம் மற்றும் மீள்திறன் வழிகாட்டல்

கோரோனா வைரஸ் (கோவிட்-19 ) (COVID-19)-இன் தாக்கங்களின் ஊடாகப் பயணிப்பது எப்படி என்பதைப் பற்றி அறிவார்ந்த முடிவுகளை மேற்கொள்ளுங்கள்.

 

இந்தத் திட்டத்தைப் பற்றி

‘கொரோன வைரஸ் (கோவிட்-19 ) (COVID-19)’-இன் பரவலைக் குறைப்பதற்காக கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களுடன் பயணிப்பதில் சிறு வணிகங்களுக்கு. Victorian Government (விக்டோரிய அரசு) உதவ உள்ளது. இதற்கு ‘வணிக வழிநடத்துத் திட்டம்’ (business mentoring program) ஒன்றினை அளிக்க Victorian Chamber of Commerce and Industry (VCCI) (விசிசிஐ)- உடன் இணைந்துச் செயலாற்றி வருகிறது.

இந்தத் திட்டத்தில், தகுதி பெறும் வணிகர்கள் தம் வணிகத்தின் எதிர்காலம் குறித்து அறிவார்ந்த முடிவுகளை எடுக்க அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுனர் ஒருவருடன் ஒரு அமர்விற்கு 2 மணி நேரம் என்ற முறையில் நான்கு வழிகாட்டல் அமர்வுகள் வரைக்கும் உதவி பெறலாம்.

பின் வரும் தலைப்புகளில் சிறப்பு வகுப்புகள் அளிக்கப்படும்:

  • தொழில் மீள்துவக்கம் – வணிகத்தினை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரும் செயல்பாடுகளுக்கு வலிவூட்டல் (செலவுக் குறைப்பு மற்றும் கடன் மற்றும் பணப் புழக்க நிர்வாகம்)
  • சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் - கொரோன வைரஸ் (கோவிட்-19 ) (COVID-19) தொற்று எவ்வாறு சந்தை மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது அல்லது இம்மாற்றங்களைத் துரிதப்படுத்தியுள்ளது என்பதை விளங்கிக்கொள்ள
  • கணினி-இணையக் கல்வி -  புதிய வாடிக்கையாளர்களையும், சந்தைகளையும் பெறுவதில் வணிகங்களுக்கு உதவுவதற்காக
  • சந்தை மற்றும் சரக்கு வினியோக முறைகளின் விரிவாக்கம் – சரக்கு வினியோக முறைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளைக் குறைக்க
  • வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் புதிப்பித்துக் கொள்ளவும் – வணிகங்களது தற்போதைய தொழிலாளர்களின் செயல்திறனை மேம்படுத்திக்கொள்வதில் உதவ

'Apply now' என்ற பொத்தான் மீது சொடுக்கி VCCI website -இன் வலைத்தலத்தில் விண்ணப்பம் ஒன்றை இடுங்கள்.

கிடைக்கும் உதவிகள் யாவை?

தகுதி பெறும் வணிகர்கள் மூன்று மாதங்களில் அனுபவமிக்கத் தொழில்வல்லுனர் ஒருவருடன் நேரடியாக நான்கு வரைக்குமான வழிகாட்டல் அமர்வுகளில் கலந்துரையாடுவார்கள். ஒவ்வொரு அமர்வும் இரண்டு மணி நேரம் நீடிக்கும். இந்த வழிகாட்டல் அமர்வுகள் தொலைபேசி மூலமாகவோ, காணொளிக் கலந்துரையாடல்கள் மூலமாகவோ அல்லது தேவையெனில் நேரடியாக அளிக்கப்படும். வழிகாட்டுனர் ஒருவர் ஒதுக்கப்படுவதற்கு முன்பாக, அவர்களுடைய தொழில் மீள்துவக்கத்திர்கான குறிப்பிட்ட தேவைகளை மதிப்பீடு செய்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சுருக்கமான வினாத்தொகுப்பு ஒன்றினைப் பூர்த்தி செய்யுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்கப்படுவார்கள்.

ஆரம்ப அமர்வினைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்களது வணிகத்தின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்பக் குறிப்பாய் வடிவமைக்கப்பட்டுள்ள விளக்கமான செயல்திட்டம் ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்படும்.

தேவைப்படும் விதத்தில் அவர்களது வணிகத்திற்கான மேலதிக உதவிக்காக விண்ணப்பதாரர்களுக்குத் தொடர்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

நிதிநிலை அறிவுரையாலோசனை, கணினி மற்றும் இணையப் பயன்பாட்டுத் திறன் பயிற்சி, மற்றும் மனவள உதவிப் பயிற்சி ஆகியன இவற்றில் உள்ளடங்கலாம்.

விண்ணப்பதாரரின் முன்னேற்றத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காகவும், தேவைப்படும் விதத்தில் கூடுதல் உதவிகள் அளிப்பதற்காகவும் வழிகாட்டியானவர் அடுத்து வரும் மூன்று மாதங்களில் மூன்று வரைக்குமான தொடர் அமர்வுகளை விண்ணப்பதாரர் உடன் மேற்கொள்வார்.

வணிகர்களுக்கான பயன்கள்

பின் வரும் வழிகளில் இந்தத் திட்டமானது வணிகங்களுக்கு உதவும்:

  • தற்போதய தொழில் மீள்துவக்கம், சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கணினி மற்றும் இணையக் கல்வி, சரக்கு வினியோக முறைகளின் விரிவாக்கம் மற்றும் தற்போது உள்ள தொழிலாளர்களின் செயல்திற மேம்பாடு
  • இடர் மேலாண்மை மற்றும் முதலீட்டு இழப்பு
  • மற்ற அரசு உதவிகள் மற்றும் உள்ளூர்ப் பகுதிகளில் கிடைக்கும் தொழில்ரீதியான சேவை அளிப்பவர்களுடன் தொடர்புகொள்ளல்

எந்த வகையான வணிகர்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்?

20-இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான முழு-நேரத் தொழிலாளர்களைக் கொண்ட சிறு வணிகர்களுக்கு இந்தத் திட்டம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் நோக்கங்களுக்காக, ஒரு சிறு வணிகர் என்பவர் ஒரு ‘தனி-வணிகராகவோ (sole trader), கூட்டுவணிகராகவோ (partnership), தனியார் நிறுவனமாகவோ, சிறு வணிகம் ஒன்றை இயக்கிவரும் அறக்கட்டளையாகவோ இருக்கலாம். ‘ஆஸ்திரேலியப் புள்ளிவிபரச் செயலகம்’ (Australian Bureau of Statistics) வரையறுத்துள்ளவாறு  ‘இருபது முழு-நேரத் தொழிலாளிகள்’ என்றால், அவர்கள் முழு-நேர வேலை செய்தாலும் அல்லது பகுதி-நேர வேலை செய்தாலும், அனைத்துத் தொழிலாளர்களாலும் செய்யப்படும் வேலைகளின் மொத்த மணித் துளிகளைக் குறிக்கும்.

வணிகங்கள் கட்டாயமாக:

  • தற்போது நடப்பிலுள்ள ‘ஆஸ்திரேலிய வணிக இலக்கம்’ (Australian Business Number (ABN)) ஒன்றை வைத்திருக்கவேண்டும்
  • ஒரு பொது நிறுவனமாக (public company), தரும வணிகமாக (இலாப நோக்கற்ற) அல்லது Body Corporate and Community Management Act 1997-இன் கீழ் இயங்கும் ‘பாடி கார்ப்பொரேட்’ ஆக இருக்கக்கூடாது
  • Victoria (விக்டோரியா) – மாநிலத்திற்குள் மீண்டும் தொடங்க, அல்லது தொடர்ந்து இயக்க எண்ணம் இருக்கவேண்டும்

விண்ணப்பிப்பது எப்படி?

VCCI (விசிசிஐ) வலைத்தலம் மூலமாக விண்ணப்பம் ஒன்றை இட இந்தப் பக்கத்தில் உள்ள 'Apply now' என்ற பொத்தான் மீது சொடுக்குங்கள்.

விண்ணப்பிப்பதில் உங்களுக்கு ஒத்தாசை தேவைப்பட்டால், தயவுசெய்து 03 8662 5333 என்ற இலக்கத்தில் VCCI(விசிசிஐ)-யுடன் தொடர்புகொள்ளுங்கள்.

Stay updated

Subscribe to Business Victoria newsletter and get the guidance, services and skills you need to successfully start, run and transform your business — delivered to