Partners in Wellbeing உதவித் தொலைபேசி இணைப்பு
மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கும் வர்த்தக முதலாளிகளுக்கு இலவச வர்த்தக அறிவுரையாளர்களையும், நிதிநிலை ஆலோசகர்களையும் அளிப்பதற்காக ‘Partners in Wellbeing’ எனும் உதவித் தொலைபேசி இணைப்பு எண்(1300 375 330 ) விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனுடைய அலுவல் நேரங்கள் வார நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை, மற்றும் வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. உங்களுடைய வர்த்தகத்தைப் பற்றி நீங்கள் துயருற்றிருந்தாலோ, படபடப்பாக இருந்தாலோ தயவு செய்து 1300 375 330-இல் Partners in Wellbeing எனும் சேவையினை அழையுங்கள், அத்துடன் நீங்கள் வேண்டினால் மொழிபெயர்க்கப்பட்ட சேவைகளையும் நீங்கள் இங்கிருந்து பெறலாம்.
‘St John ஆம்புலன்ஸ் மனநல மற்றும் நெருக்கடிகால ஆதரவுதவிப் பயிற்சி’
இந்தத் திட்டம் இப்போது மூடப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை நீங்கள் பெற விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்
ஒவ்வொரு நகரவையைச் சேர்ந்த ஊழிய அங்கத்தவர் ஒருவருக்கும், ‘வர்த்தகர் நலக் கூட்டமைப்பு’ (Chambers of Commerce) ‘வர்த்தக சங்கங்கள்’ (Business Associations) அல்லது ‘வர்த்தகத் தொடர்புவலைகள்’ (Business Networks) ஆகிய அமைப்புகளில் பதவிகள் வகிக்கும் முக்கிய அங்கத்தவர்களுக்கும் ‘St John ஆம்புலன்ஸ் அங்கீகாரம் பெற்ற மனநல மற்றும் நெருக்கடிகால ஆதரவுதவி’க்கான பயிற்சி கிடைத்தது.
இப் பயிற்சியானது இதில் பங்குபற்றுபவர்களுக்குப் பின் வரும் விடயங்களில் உதவும்:
- பொதுநல அல்லது மனநல சவால்களை எதிர்கொள்ளும் உள்ளூர் வர்த்தக சமூகத்தினருக்கு ஆதரவுதவி அளிக்கத் தேவைப்படும் திறன்களை ஏற்படுத்திக்கொள்ள
- ‘மன நலத்திற்கே முதலிடம்’ என்ற ரீதியிலான ஆதரவுதவியை அளிப்பதற்காக தேசிய அளவில் அங்கீகரிக்கப்படும் தகுதிச் சான்று ஒன்றைப் பங்குபற்றுனர்ளுக்கு வழங்க
- சிறு வர்த்தக முதலாளிகளுக்கும், மற்ற சமூக அங்கத்தவர்களுக்குமான பொதுநல மற்றும் மனநல ஆதரவுதவி இருக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த.
மேலதிக ஆதரவுதவி
அறிவுரை வல்லுனர்களை அங்கத்தவர்களுக்கு உடனடியாக அளிக்கவும், இன்னலில் இருப்பவர்களை அடையாளம் கண்டு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வேலைக்-காலப் பயிற்சியை ஊழியர்களுக்கு அளிக்கவுமென தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களில் மனநல நிபுணர்களும் ஒரு அங்கமாக இடம்பெற்றிருப்பார்கள்,
இந்த ஆதரவுதவி சேவைகள் 2022-ஆம் ஆண்டு வரை தொடரும் என்று எதிபார்க்கப்படுகிறது, மற்றும் இந்த சேவைகளுக்கான தேவை மற்றும் எதிர்கால சூழல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த கட்ட சேவைகள் அமையும்.
இந்தக் கூடுதல் சேவைகளைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும், மற்றும் அவற்றைப் பற்றிய விபரங்களை இந்தப் பக்கத்தில் காணலாம்.
Business Victoria -அமைப்புடன் உங்கள் மொழியில் தொடர்புகொள்ள 13 14 50 -இல் TIS National -ஐ அழைத்து, Business Victoria -அமைப்பின் உதவித் தொலைபேசி இணைப்பான 13 22 15 எனும் இலக்கம் வேண்டுமெனக் கேளுங்கள்.